“கட்டிங் போடலாமா... வேற பிராண்ட் வேணாம்“நடு ரோட்டில் சரக்கு கேட்டு பெண் ரகளை - திருப்பூரில் பரபரப்பு
- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் - திருப்பூர் பிரதான சாலையில் குடிபோதையில் அரசு பேருந்தை நிறுத்தி அட்டகாசம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
- மேலும் அங்கு வந்த காங்கேயம் போலீசாரிடம் தலை வலி வராத குவாட்டர் வாங்கி தர வேண்டும் என அடம் பிடித்தததால் போலீசார் திக்கு முக்காடினர்.
- திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை எந்நேரமும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும்.
- இச்சாலையில் இன்று காலை முதல் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் வாகனங்களை மறித்தும், டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களை ஆபாச வார்த்தைகளால் வசை பாடிய படி உள்ளதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் பறந்துள்ளது..
- இதையடுத்து நகராட்சி சந்தை பகுதிக்கு சென்ற போலீசார் பார்க்கையில ஒரு பெண் மூக்கு முட்ட அங்குள்ள டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு, போதை தலைக்கேறிய நிலையில் கலாட்டாவில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- உடனடியாக அப்பெண்ணை போலீசார் அப்புற படுத்த போராட்டம் நடத்திய நிலையில் போலீசாரின் முயற்சி பலனளிக்கவில்லை.
- போலீசாரிடம் திமிறி சென்ற போதை பெண் அங்கு வந்த அரசு பேருந்தை நிறுத்தி, அதன் மீது ஹாயாக சாய்ந்து கொண்டு போலீசார் சொல்வதை கேக்காமல் அடம் பிடித்தார். மேலும் அங்கு சென்ற காரை மடக்கியவர் காரின் சாவியை எடுத்து கொண்டு சென்றார். போலீசாரையும் கையை பிடித்து இழுத்து வசை பாடினார்.
- பின் போலீஸ் உயரதிகாரிகள் சொன்னதை கேட்டு சாலையை விட்டு நகர்ந்த பெண், போலீசாரிடம் எனக்கு குவாட்டர் கொடுத்தால் தான் வருவேன் எனவும், தலை வலி வராத எக்ஸ்பிரஸ் ரக பிராந்தி தான் வேண்டும் என அடம்பிடித்தார்.
- பின் அவரை சமாதானம் செய்த போலீசார் வேறு வழியில்லாமல் குவாட்டர் வாங்கி வர சொல்ல, லாவகமாக ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
- போலீசாரின் விசாரணையில் அப்பெண் திருப்பூர் கலைஞர் நகரை சேர்ந்த மகேஷ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவிற்கு அடிமையானதும் கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் இது போல கலாட்டாவில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- பின்னர் பெண் போலீசார் அவரை நன்கு கவனித்து, பின்னர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- காங்கேயத்தில் குடிபோதையில் பெண் ஒருவர் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.