"ஐயா என் புள்ளைய விட்ருங்க ஐயா"...கலெக்டர் அலுவலகம் முன் தீ குளிக்க முயன்ற பெண்கள் - ராமநாதபுரத்தில் பரபரப்பு
மகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து போலீசார் சித்திரவதை செய்வதாக கூறி, தாய் மற்றும் உறவினர்களான 4 பெண்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தீக்குளிக்க முயன்றனர். உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரது மகன் பிரசாத்தை, உச்சப்புளி காவல் நிலைய போலீசார், கஞ்சா மற்றும் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பிரசாத் மீது,
பொய் வழக்கு போட்டு போலீசார்அடித்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், பிரசாத்தின் தாய் சக்தி மற்றும் அவரது உறவினர்கள், உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றனர்.