சுற்றி வளைத்து மடக்கிய பெண்கள்... திடீரென உறுமிய பைக் - பரபரப்பு காட்சி

Update: 2023-05-01 03:10 GMT

கோவையில், நிலத்தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பெண்கள் மீது இருசக்கர வாகனத்தை ஏற்ற முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் சி.எம்.நகர் உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடத்தில், ஏராளமானோர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த இடத்தை வைத்து, போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக, அண்மையில் மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில், வெங்கட் என்பவர் அடியாட்களுடன் சி.எம் நகர் பகுதிக்கு வந்து, 43 சென்ட் இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி பிரச்சினை செய்துள்ளாார். மேலும், கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்து, சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்க முயன்று, அப்பகுதி மக்களிடம் வெங்கட் தகராறில் ஈடுபட்டார். தகவலின் பேரில் வந்த போலீசார், இருதரப்பையும் சமாதானப் படுத்திக் கொண்டிருந்த வேளையில், வெங்கட் அழைத்து வந்த அடியாட்களில் ஒருவர், திடீரென இருசக்கர வாகனத்தை அங்கு நின்றிருந்த பெண்கள் மீது மோதச் செய்தார். இதில் சில பெண்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்