கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, நிலத்தகராறில், பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மத்தூர் பகுதியை சேர்ந்த மாதம்மாள் என்பவருக்கும், அவரது உறவினரான செந்தாமரை என்பவருக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக தகராறு நடந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் மீண்டும் தகராறு ஏற்படவே, தகவல் அறிந்து வந்த செந்தாமரையின் உறவினர் ரமேஷ் என்பவர், ஆத்திரமடைந்து மாதம்மாளின் தலையில், இரும்புக் கம்பியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.