55 வயது மதிக்கத்தக்க நபர் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில் கருவுற்றார். இது குறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதனிடையே இந்த நபர் திடீரென உயிரிழந்தார். இந்நிலையில் மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி தாய் காளியம்மாள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, (gfx in 1 ) "ஓநாய்கள் ஆடுகள் போல் உடை அணிந்து திரிகின்றது" என கருத்து தெரிவித்தார். (gfx in 2 )பலவீனமானவர்களுக்கு இலவச மற்றும் திறமையான சட்ட சேவைகளை வழங்குவதும், பொருளாதார அல்லது பிற இயலாமை காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதி மறுக்கப்பட கூடாது என தெரிவித்துள்ளார். (gfx in 3 ) பாலியல் குற்றம் செய்தவர் இறந்துவிட்டார் என்பதனால் மனநலம் குன்றிய குழந்தைக்கு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்குவதை தவிர்த்து மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய பதில் மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார். (gfx in 4 )பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய குழந்தைக்கு இழப்பீடாக ரூ. 14 லட்சம் 4 வாரத்தில் மாவட்ட சட்ட சேவை மைய சேர்மன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.