இந்தியா திரும்புமா கோஹினூர் வைரம்...? எலிசபெத்-ன் கிரீடம் அடுத்து யாருக்கு..?

Update: 2022-09-09 13:48 GMT

இங்கிலாந்து மகாராணி 2ம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு அவரது கிரீடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிற்குத் திருப்பித் தர சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பல அமானுஷ்யங்களுக்கும் வரலாற்று பெருமைகளுக்கும் சொந்தமான கோஹினூர் வைரம் பல அரசர்களின் கைகளில் இருந்து மாறி இறுதியாக இங்கிலாந்து அரசியின் கிரீடத்தை சென்றடைந்தது...

இதை அரசர்கள் வைத்திருந்தால் சாபக்கேடு போன்ற வதந்திகள் ஏராளமாக உள்ளன...

அப்படியாக உலகின் மதிப்புமிக்க இந்த கோஹினூர் வைரம் படையெடுப்பின் போது பிரிட்டிஷ் வசமானது...

பல முறை இந்திய அரசு முயன்றும் இந்த வைரக்கல்லால் இந்தியா வர முடியவில்லை... தற்போது இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத்தும் காலமான நிலையில், கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடம் புதிய ராணியான கமீலா வசம் செல்லும்...

இந்நிலையில், விக்டோரியா மகாராணிக்கு பரிசாக வழங்கப்பட்ட இந்த கிரீடத்தை, எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகாவது இந்தியாவிற்குத் திரும்பத் தர வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்