"தனியார்மயமாக்கப்படுமா..? தமிழக போக்குவரத்துக் கழகம்.." - அமைச்சர் சொன்ன பெஸ்ட் 'Example'

Update: 2023-05-27 13:53 GMT

தமிழக போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார்மயம் ஆக்கப்படாது என்றும், ஆனால் உடல்நிலை சரியில்லாதபோது தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் என்றும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 612 தொழிலாளர்களுக்கு, பணப் பலன்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்