“மனைவியின் தங்கை நிலத்தை..“ - மகனுக்காக தந்தை செய்த நூதனம் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2023-03-26 11:08 GMT

சென்னை கோயம்பேடு புதிய காலனியை சேர்ந்த விஜயராணி என்பவரின் தாய் சரோஜா பெயரில், ஆவடி அடுத்த வெள்ளானூர் அருகே 2 ஆயிரத்து 400 சதுர அடி கொண்ட நிலம் இருந்தது. அதனை 2 பாகமாக பிரித்து, விஜயராணியின் மூத்த சகோதரியான அமுலுவின் கணவர் ராமமூர்த்தி பெயரில் ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சகோதரியின் கணவர் ராமமூர்த்தி, விஜயலட்சுமி என்பவர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் தயாரித்து, தனது மகன் மனோஜ் பெயருக்கு விஜயராணியின் நிலத்தை பத்திரப்பதிவு செய்து ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக, விஜயராணி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், நில மோசடியில் ஈடுபட்டதாக ராமமூர்த்தி, அவருடைய மகன் மனோஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்