கணவருடன் உடலுறவுக்கு மறுத்த துணை .. "மன கொடுமைக்கு சமம்" - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர், குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்காததால், மேல்முறையிடு செய்திருந்தார். 1979ஆம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி தன்னுடைய வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதன் பின்னர் தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகவும் கூறியுள்ளார். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்காததால், குடும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நாடியதாகவும், ஆனால், குடும்ப நீதிமன்றம் விவாகரத்து தராமல் மனுவை தள்ளுபடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருமணம் ஆன பின்னர் நீண்ட காலம் உடலுறவுக்கு துணை மறுப்பு தெரிவித்திருப்பது மன கொடுமை என தெரிவித்து, கீழமை நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்து விவாகரத்து வழங்கி ஆணையிட்டுள்ளது.