கணவன் கண்முன்னே கிணற்றில் குதித்து உயிரை விட்ட மனைவி... உறவினர் செயலால் விரக்தி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பச்சூர் பகுதியை சேர்ந்த சரளா என்பவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. அப்பெண் தனது கணவருக்கு தெரியாமல் உறவினரான சூரியா என்பவரிடம் 2 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது தெரிய வரவே சரளா தன் கணவருடன் சென்று சூரியாவிடம் நகை மற்றும் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் சூரியா தர மறுக்க மனமுடைந்த சரளா வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து கணவன் கண் முன்னே தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிராம மக்கள் உதவியுடன் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.