"அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த பயம் ஏன்?"- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி
அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி, எல்.ஐ.சி நிறுவனம், எஸ்.பி.ஐ வங்கியின்
பல ஆயிரம் கோடி ரூபாய் அதானி குழும நிறுவனத்திற்கு முதலீடாக வழங்கப்பட்டுள்ளதாக
குற்றம்சாட்டியுள்ளார். பொதுமக்களின் ஓய்வூதிய பணம் ஏன் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ள ராகுல்காந்தி, அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த பிரதமர் மோடிக்கு ஏன் இத்தனை பயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.