பெண்கள் பாதுகாப்புக்கு யார் பிரதமராக வேண்டும்? - பாஜக ஆட்சிக்கு அதிர்ச்சி..
- பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பிரதமர் மோடி
- "பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான சட்டங்கள்"
- இந்தியாவை இயக்குவது இளைஞர் சக்தியே - பிரதமர் மோடி
நாடு முழுவதும் பெண்களுக்கு சுதந்திரமும், முழு பாதுகாப்பும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என உறுதியளித்தார் பிரதமர் மோடி... பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்பயா நிதி திட்டம், இணைய குற்றங்களை தடுக்கும் திட்டம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவி வழங்கும் ஒன் ஸ்டாப் சென்டர் திட்டம், பெண்களை காவல்துறையில் பணியமர்த்த பயிற்சி என பல திட்டங்களை செயல்படுத்து கிறது அவரது அரசு.பெண் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற திட்டம் குறித்து தொடர்ந்து பேசும் பிரதமர் மோடி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான சட்டங்களை இயற்றி உள்ளோம் எனவும் பெண்களுக்கு மேலும் அதிகாரம் அளிக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும் எனவும் உறுதியளிக்கிறார்.இந்தியாவை இயக்குவது இளைஞர் சக்தியே என பெருமிதம் தெரிவிக்கிறார் பிரதமர் மோடி. பொருளாதார வளர்ச்சி இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது எனக் கூறும் பிரதமர் மோடி, இளைஞர்கள் தீர்க்கமாக செயல் பட்டால் மிகவும் முன்னேறிய நாட்டைக்கூட நம்மால் முந்திவிட முடியும் என்கிறார்.
- "பெண்கள் சமூகத்தை மாற்றும் திறன் கொண்டவர்கள்"
- இளைஞர்களே நாட்டின் சொத்து, எதிர்காலம் - ராகுல்
பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சியடைய முடியும் என்கிறார் ராகுல் காந்தி. பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனக் கூறும் ராகுல் காந்தி, பெண்கள் சமூகத்தை மாற்றும் திறன் கொண்டவர்கள், அரசியல், தொழில்துறையில் அவர்களது வெற்றி நாட்டை வலுவாக்கும் எனவும் சொல்கிறார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றுவோம் என்கிறார் ராகுல் காந்தி.இளைஞர்களே நாட்டின் சொத்து, எதிர்காலம் எனக் கூறும் ராகுல் காந்தி, வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினை எனக் கூறுகிறார். அரசு மற்றும் தனியார் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் எனவும் உறுதியளிக்கிறார். வேலையில்லா பட்டதாரிகளை அரவணைத்து, அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவே வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி திட்டம் கர்நாடகாவில் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்திருந்தார்.