ஓடிக்கொண்டிருக்கும் போதே அக்கக்கா கழன்று விழுந்த அரசு பேருந்து பாகங்கள்.. சிரித்தபடியே சிதறியதை தூக்கிவரும் ஊழியர்கள்
மதுரையில் மாட்டுத்தாவணி அருகே, அரசுப் பேருந்தில் இருந்து பாகங்கள் கழன்று விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பூ மார்க்கெட் அருகே பேருந்து வந்த போது, பேருந்தில் இருந்து ஒரு பகுதி நடுவழியில் கழண்டு கீழே விழுந்தது.
இரும்பு கம்பி, பலகை சாலையில் விழுந்து சிதறிய நிலையில், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் தப்பினர்.
இதையடுத்து பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும், சிரித்தபடியே சிதறிக் கிடந்த பாகங்களை எடுத்துச் சென்றனர்.
மதுரை மாநகரில் பெரும்பாலான பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.