"நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்" ஃபுட் டெலிவரி நபருடன் துணையாக வரும் நாய்
உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் துணையாக அவரது நாயும் உடன் வருவது காண்போரை நெகிழ செய்கிறது. இந்தக் காலத்தில் நண்பர்கள் கூட உண்மையாக இருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆனால், ஆறறிவு மனிதர்களுக்கு கூட இல்லாத நன்றியும் பாசமும் ஐந்தறிவு நாயிடம் இருப்பது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.