95%வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? "அத பாக்க நானும் கிளம்பிட்டேன்" அமைச்சர் மனோ தங்கராஜ் கிண்டல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்க தானும் கிளம்பிவிட்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிண்டல் பதிவு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கூறியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே எம்.பிக்கள் சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை இடத்திற்கு நேரில் சென்று, ஜேபி நட்டாவின் கருத்தை கிண்டல் செய்திருந்த நிலையில், தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்க நானும் கிளம்பிவிட்டேன் என அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.