அள்ள அள்ள குறையாத 10 ரூபாய் காயின்பிடித்த பைக் வாங்க இளைஞர் செய்த செயல் - டயர்டு ஆன ஷோரூம் ஊழியர்கள்
ஓசூர் அருகே இளைஞர் ஒருவர், 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களை அளித்து இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை சேர்ந்த ராஜிவ் என்ற இளைஞர், கடந்த 3 ஆண்டுகளாக 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களை சேமித்து, அதனைக்கொண்டு இருசக்கர வாகனம் ஒன்றினை வாங்கியுள்ளார். இருசக்கர வாகன ஷோரூமிற்கு மூட்டைகளில் கொட்டி கொண்டுவரப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை எண்ணி முடிக்க 2 மணி நேரம் ஆனது. அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டுமென வலியுறுத்தி இவ்வாறு செய்ததாக ராஜிவ் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்திற்கான மீதி பணம் லோன் மூலம் செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.