நள்ளிரவில் தந்தை செய்த பகீர் காரியம் - காலையில் விழித்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நள்ளிரவில் தந்தை செய்த பகீர் காரியம் - காலையில் விழித்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சேலத்தில், குடும்பப் பிரச்சினையில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி வேலுநகர் தெருவைச் சேர்ந்த ராஜசேகரன் - கார்த்திகை தேவி தம்பதிக்கு சக்தி என்ற மகள் உள்ளார்.
இந்தநிலையில், நள்ளிரவு நேரத்தில் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மனைவி கார்த்திகை செல்வியை கொலை செய்துவிட்டு கணவர் ராஜசேகரன் வீட்டில் இருந்து தப்பியோடி உள்ளார்.
அதிகாலை மகள் எழுந்து பார்த்தபோது, தாய் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள கணவர் ராஜசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.