சொத்துக்காக மகள் செய்த காரியம்.. மனம் வெறுத்து தாய் எடுத்த முடிவு - உயிர் துடித்த அந்த நொடி

Update: 2023-07-26 10:50 GMT

https://youtu.be/yc59glMzLZIகன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே, வீட்டை எழுதித்தராதது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த வேதனையில் தாயார் விஷம் குடித்து உயிரிழந்தார்.

திருவட்டார் அருகே கொல்லிக்கோட்டுவிளை பகுதியை சேர்ந்த சிம்சன் - லீமாராணிக்கு ஷாம்லன் என்ற மகனும், ஷாம்லி என்ற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு பிராங்கோ என்பவருடன் திருமணம் முடிந்து, ஷாம்லி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தபோது, தாயார் லீமாராணியிடம் வீட்டை எழுதி தருமாறும், அதிக நகைகள் வேண்டுமென்றும் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். எனினும் லீமாராணி வீட்டை எழுதிக்கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து லீமாராணி மீது திருவட்டார் காவல்நிலையத்தில் ஷாம்லி புகார் அளித்தார். மகளே தன் மீது புகார் அளித்ததால் மனவேதனைக்கு உள்ளான லீமாராணி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்