1.22 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2023-03-04 14:18 GMT

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் நடைபெற்ற 1 லட்சத்து 22,000 பயனாளிகளுக்கு, 267.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, முடிவுற்ற மற்றும் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களுக்காக பணியாற்ற காத்திருப்பதாகவும் தேர்தலுக்காக அல்ல என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்