"ஆபத்தான கால கட்டத்தில் உள்ளோம்" - திருமாவளவன் பேச்சு

Update: 2022-09-29 02:14 GMT

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் பாஜக ஆட்சிக்கு வர கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணாநகரில் திருமாவளவன் மணி விழா மற்றும் சனாதான சக்திகளை தனிமைபடுத்துவோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், ஆபத்தான கட்டத்தில் பயணித்து வருவதாகவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் பாஜக ஆட்சிக்கு வர கூடாது என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்