"குடிநீரில் கழிவு நீர். மீட்டர் கணக்கீட்டில் குளறுபடி?" - அடுக்கடுக்காக புகார் தெரிவித்த மக்கள்
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், சென்னயில் உள்ள 15 மண்டலங்களில் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் ஒரு மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெற்றனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், கழிவுநீர் வீடுகளுக்குள் வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்இதேபோன்று வணிக கட்டடங்களில், தண்ணீர் மீட்டர் பொருத்தப்பட்டு கணக்கீடு செய்வதிலும், கட்டணம் நிர்ணயிப்பதிலும் வெளிப்படத்தன்மை இல்லை என்று மற்றொருவர் கூறினார்.இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு தீர்வுகண்டு வருவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பெறப்பட்ட 1 லட்சத்து 12 ஆயிரம் புகார் மனுக்களில், 1 லட்சத்து 10 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நகரின் வளர்ச்சிக்கேற்ப, குடிநீர்த் தேவையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடிநீர் விநியோக கட்டமைப்பை குடிநீர் வாரியம் விரிவுபடுத்தும் வேளையில், பழுதடைந்த குழாய்களை சீரமைத்து, கழிவுநீர் கலக்காத தூய்மையான குடிநீரை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது