விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. தரப்பில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பேனர் கிழிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக சாவர்க்கர் விவகாரம் சர்ச்சையாகி வருகிறது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, தாவணகரே மாவட்டத்தில் சாவர்க்கர் புகைப்படம் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. வால் வைக்கப்பட்ட அந்த பேனர் கிழிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.