தினந்தோறும் பாலியல் தொல்லை.. தூங்கும் பாயில் ரத்தக்கறை - வதை கூடமான பிரபல ஆசிரமம்.. ஷாக் மேல் ஷாக்

Update: 2023-02-22 06:45 GMT
  • முதியோர்களை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை, மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தல், பெண்களுக்கு பாலியல் கொடுமை என விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் அடுக்கடுக்காக வெளிவந்தன.
  • காப்பகத்தில் விட்டிருந்த தன் மாமனாரை காணவில்லை என ஒருவர் நீதிமன்றம் வரை சென்றது தான் அன்புஜோதி ஆசிரமத்தின் முகத்திரையை கிழித்திருக்கிறது...
  • போலீஸ் விசாரணையும் வேகமெடுத்த நிலையில் ஆசிரமத்தில் அரங்கேறிய கொடூரங்கள் ஒவ்வொன்றும் வெளிச்சத்திற்கு வந்து பலரையும் பதற வைத்திருக்கிறது.
  • காப்பகத்தில் இருந்தவர்களுக்கு ரேஷன் அரிசியில் உணவு கொடுத்திருப்பதும் இதற்காக மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி ஆசிரமத்தில் இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
  • ஆசிரமத்தில் விட்டிருந்த தங்கள் உறவினர்களை காணவில்லை என அடுக்கடுக்காக பலர் முன் வந்து புகார் அளித்து வருவதும் இதன் பின்னணியில் ஏதோ நடந்திருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தியது.
  • காப்பகத்தில் இருந்தவர்களை குரங்குகளை விட்டு கடிக்க வைத்தது, ஆசிரமத்தில் உள்ள பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது என ஒவ்வொன்றும் ஆசிரமத்தில் அரங்கேறி இருந்ததும் அதிர்ச்சி தந்திருக்கும் சூழலில் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது...
  • உடனடியாக சிபிசிஐடி எஸ்.பி.அருண் பால கோபாலன் தலைமையில் ஏடிஎஸ்பி கோமதி அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் அன்புஜோதி ஆசிரமத்தில் ஆய்வு செய்தனர்.
  • ஆய்வின் போது மனநலம் பாதிக்கபட்டவர்கள் கட்டப்பட்ட சங்கிலி, தாக்குதலுக்கு பயன்படுத்திய தடிகள், உள்ளிட்ட பொருட்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • உடன் சென்ற தடயவியல் துறை அதிகாரிகளும் அங்கிருந்த பொருட்களை சோதனைக்கு உட்படுத்தினர்.. அப்போது ஆசிரமத்திற்கு அருகே ரத்தக்கறை படிந்த பாய் ஒன்று கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதுஒருபுறமிருக்க அன்புஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், துன்புறுத்தலுக்கு ஆளான மனநலம் பாதிக்கப்பட்ட 16 பெண்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் கல்பாக்கம் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்.
  • அன்புஜோதி ஆசிரமத்தில் நடந்த ஒவ்வொன்றும் பலரையும் பதற வைத்திருக்கும் நிலையில் 15 ஆண்டுகளாக உரிய அனுமதி பெறாமல் இந்த காப்பகம் இயங்கி வந்தது எப்படி? என்ற கேள்வியே இங்கே பிரதானமாக எழுந்திருக்கிறது..
  • ஆசிரம உரிமையாளர் ஜூபின் பேபி, அவரின் மனைவி மரியா ஜூபின் உட்பட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
  • அப்படி அவர்களை விசாரித்தால் அன்புஜோதி ஆசிரமத்தில் நடந்த அத்தனையும் வெளிச்சத்திற்கு வரும்...
Tags:    

மேலும் செய்திகள்