கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் - ஆதரவு தெரிவிக்க வந்த பி.ஆர்.பாண்டியன் கைது

Update: 2022-09-17 15:19 GMT

2வது பசுமை விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்...பசுமை 2வது விமான நிலையத்திற்காக ஏகனாபுரத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில் நிலம் எடுப்பதாகத் தகவல் பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்... 53வது நாளான இன்று 600க்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது... இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த மாநில விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வரும் வழியிலேயே கைது செய்யப்பட்டார்... காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்... ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தங்களிடம் கருத்து கேட்டு 80 சதவீத மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிலம் எடுக்க அரசு முன் வர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்