உலக அரசியல் போக்கையே மாற்ற போகும் மேஜிக் `270' - தமிழகத்தின் கடைக்கோடி வரை தாக்கம் தரும் ஒரு முடிவு

Update: 2024-11-05 03:06 GMT

அமெரிக்காவின் 47 ஆவது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜனநாயக கட்சியில் அதிபர் போட்டியில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலக, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் இறங்கியிருக்கிறார். குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவ, வெற்றியை தீர்மானிக்கவல்ல ஸ்விங் மாகாணங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்தினர். அமெரிக்காவில் மொத்தம் உள்ள வாக்காளர்களில் கிட்டத்தட்ட 7 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்துவிட்டனர். மீதம் உள்ள வாக்காளர்கள் 50 மாகாணங்களிலும் இன்று வாக்கை பதிவு செய்கிறார்கள். அமெரிக்காவில் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நிறைவடையும். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 இடங்களில், 270 இடங்களில் வெற்றிப்பெறும் வேட்பாளர் வெற்றிப்பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். அமெரிக்காவில் தேர்தல் முடிந்ததும் வாக்குக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலில் இழுபறி இல்லையென்றால் சில மணி நேரங்களிலே முடிவுகள் தெரியவந்துவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்