விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலை..அண்ணன் மகன்களால் நேர்ந்த கொடூரம்!
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆதிஷ். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான இவர், அவரது அண்ணன் மகன்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ஆதிஷை காப்பாற்ற சென்ற அவருடைய அண்ணன்கள் இருவரும் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஆதிஷின் அண்ணன் மகன்களான சுபாஷ் மற்றும் சுனில் ஆகிய இருவரை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில், சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர். ஆதிஷை கொலை செய்த சுபாஷ் மற்றும் சுனிலுடன் கொலை செய்ய தீட்டம் தீட்டிக் கொடுத்த நண்பர்களான ஜெயப்பிரகாஷ் மற்றும் தினேஷ் ஆகியோரும் சரணடைந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.