வெரைட்டி ரைஸ் வெறும் 5 ரூபாய் தான்.. வீட்டு சாப்பாடு போல் தரம் - குவியும் ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்கள்
கோவையில், தன்னார்வ அமைப்பினர் ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சுமதி மெமோரியல் ட்ரஸ்ட் சார்பாக, அவிநாசி சாலையில் ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது. தக்காளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புளிசாதம் என, சுழற்சி முறையில் நாள்தோறும் இரண்டு வகையான உணவுகள் வழங்கப்படுவதாகவும், அங்கேயே அமர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னார்வ அமைப்பினர் தெரிவித்தனர். நாள்தோறும் 700 பொட்டலங்கள் வரை கொடுத்து வருவதாகவும் வருங்காலத்தில் அதை உயர்த்தி தர இருப்பதாகவும் குறிப்பிட்ட தன்னார்வலர்கள், குறைந்த விலையில் தரமான உணவு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.