காரில் கஞ்சா கடத்திய விஏஓ சஸ்பெண்ட்

Update: 2023-02-21 04:44 GMT
  • புதுக்கோட்டை அருகே, காரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
  • புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
  • இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயா ரவி வர்மா, அவரது நண்பர்கள் கணேசன் மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
  • இந்த நிலையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் ஜெயா ரவி வர்மாவை, பணியிடை நீக்கம் செய்து, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்