ஏழு ஸ்வரங்களின் ராணி வாணி ஜெயராம்...இனிய குரலால் கிறங்கச் செய்தவர் வாணி
வேலூரில் 1945 ஆம் ஆண்டு பாரம்பரிய இசைக்குடும்பத் தில் இதே நாளில் பிறந்தவர் கலைவாணி...
குழந்தையிலே வீணையாக ஒலித்த அவரது குரல் பின்னாளில் இந்திய ரசிகர்களையே திக்குமுக்காடச் செய்தது... வங்கியில் பணியாற்றிய வாணியை பின்னணி பாடகியாக்கிய பெருமை அவரது கணவர் ஜெயராமையே சாறும். இந்தியில் பாட தொடங்கியவர், தமிழில் மல்லிகை என் மன்னன் மயங்கும்... என எவர்கிரீன் பாடலால் ஹிட் அடித்தவர்...
அபூர்வ ராகங்கள் படத்தில், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் பாடலுக்காக முதல் தேசிய விருதை வென்றார்.
மழைக்கால மேகம் ஒன்று என இனிய குரல் கேட்டு ஊஞ்சலாட செய்தவர்...
மழைக்கால மேகம் ஒன்று
ஆளை அசத்தும் மல்லியே மல்லியே என மந்திரகுரலால் மயக்கியவர்
ஆளை அசத்தும் மல்லியே மல்லியே
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் என மாணவிகளின அரங்கை ஆட்கொண்டது இவரது குரலே...
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
பின்னாளில் ஒடியா, பெங்காலி, குஜராத்தி, காஷ்மீரி என இவர் பாடாத மொழிகளே இல்லை... என்ற அளவிற்கு பிசியானார் வாணி... 3 முறை தேசிய விருது, பல மாநில அரசுகளின் விருதுகளை வாங்கிய வாணி இன்றும் தெய்வீக குரலாக இனிக்கச் செய்கிறார்
முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே...
அபூர்வத் திறமையாள் ஆட்கொண்ட அவருக்கு, ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.