அரியலூரில் ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான கோயிலை நீர் சூழந்துள்ளது - வைத்தியநாதர் சுவாமி கோயிலில் நீர் சூழ்ந்தது
அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது சுமார் ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து கோயில் ஆகும்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது எல்லாம், இந்தக் கோயிலில் வெள்ளநீர் சூழ்ந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், ஒரு லட்சத்து 24 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் கொள்ளிடத்தின் ஊற்று நீர் கோயிலின் கருவறை வரை சூழ்ந்துள்ளது.
கோயில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, கோயிலில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது