"மீண்டும் ஆட்சி அமைத்தால் இலவச ஸ்கூட்டி" தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி

Update: 2023-02-13 06:36 GMT

திரிபுராவில் மீண்டும் ஆட்சி அமைத்தால், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என, மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

செப்பாஜிஹலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்ததன் மூலம், தேர்தலுக்கு முன்னதாகவே சி.பி.எம். தனது தோல்வியை ஒப்புக்கொண்டதாக சாடினார்.

மேலும், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், தேர்தல் வாக்குறுதிபடி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்றார்.

ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள், பெண் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வைப்பு பத்திரம், மானிய விலை உணவு உள்ளிட்டவற்றை, பாஜக தேர்தல் வாக்குறுதியாக அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்