சற்றும் எதிர்பாராத சுற்றுலா பயணிகள்..! அருவியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபரீதம்
அச்சன்கோவில் அருகே, கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சியில், சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 30க்கும் மேற்பட்டோர் சிக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், துரிதமாக செயல்பட்டு அனைவரையும் மீட்ட நிலையில், இருவர் படுகாயமடைந்தனர். இதில், மதுரையைச் சேர்ந்த குமரன் என்பவர், தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, பாதுகாப்பு கருதி கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.