உக்ரைன் போர் முடிவு-எப்படி? எப்போது?...போர் குறித்து போர் கோட்பாட்டாளர்கள் கருத்து
உக்ரைன் போர் முடிவு-எப்படி? எப்போது?...
போர் குறித்து போர் கோட்பாட்டாளர்கள் கருத்து
உக்ரைன் போரில் இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக போர் கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் துவங்கியது. 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், நாள்தோறும் தாக்குதல்கள் அதிகரிப்பதோடு இறப்புகளும் உயர்ந்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் போர் எப்படி எப்போது முடிவடையும் என்பதைப் பற்றி கருத்து தெரிவித்த போர் கோட்பாட்டாளர்கள், சமாதானம் விரைவில் வராது என்று கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் மேற்கு நாடுகள் என இரு தரப்பிலுமே பல சிக்கல்கள் உள்ளதாகவும், மறுமலர்ச்சிக்கான புதினை சூதாட வைக்கும் உள்நாட்டு அரசியலும் நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த படையெடுப்பு மேலும் ஒரு வருடம் அல்லது 2 வருடங்களுக்கு நீடிக்கும் என்று தெரிவித்த அவர்கள், இந்த போர் மிகவும் பயங்கரமானது என்றும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் எனவும் அதிர்ச்சி தெரிவித்தனர். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது புடினுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.