உலகையே பதற வைத்த பயணம்.. உடைந்த அமெரிக்காவின் ரகசியம் - மிரண்ட ரஷ்யா.. அஞ்சாத சீனா..!
- கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்க்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் உக்ரைன் சென்றது... இதுவே முதல் முறை.
- உண்மையிலேயே செவ்வாய் அன்று போலந்து அதிபரையும்... புதன் கிழமை கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்களையும் பைடன் சந்திக்க இருப்பது தான் அதிகாரப்பூர்வ திட்டம் என அறிவித்திருந்தது, வெள்ளை மாளிகை.
- உக்ரைனுடன் எல்லையை பகிரும் போலாந்திற்கு செல்வதால்... நிச்சயம் பைடன் உக்ரைனுக்கு செல்ல கூடும் என்று முதலிலேயே எதிர்பார்க்கப்பட்டது.
- ஆனால் முதலில் இதனை மறுத்துவிட்ட வெள்ளை மாளிகை... மிகவும் ரகசியமாக அதிபரின் உக்ரைன் பயணத்தை திட்டமிட்டிருக்கிறது.இதற்கு முன்பு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர் உச்சகட்டத்தை தொட்டிருந்த போதும்...
- இது போல் அமெரிக்க அதிபர்களான ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா மற்றும் டிரம்ப் ஆகியோர் போர் நடக்கும் இடத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
- அந்த வகையில், அமெரிக்க அதிபரின் வருகை... உக்ரைன் மக்களுக்கும் சரி... அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் சரி... புது தெம்பை கொடுத்திருக்கிறது..
- இந்த சந்திப்பின் போது, தொடர்ந்து 32 வது முறையாக உக்ரைனுக்கு சுமார் நான்காயிரத்து 135 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அதிபர் பைடன் அறிவித்தார்.
- ஆனால் மறுபுறம் அமெரிக்க அதிபரின் வருகையை கோபமூட்டும் செயல் என விளாசியிருக்கிறது, ரஷ்யா.இன்னொரு புறம்... ரஷ்யாவிற்கு தொடர்ந்து சீனா ஆயுத உதவிகளை செய்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில்...
- சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Wang Yi , ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பது, இந்த பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
- நீண்ட நாட்களாக பைடர் ஜெட் விமானங்களை கேட்டு வரும் உக்ரைனின் கோரிக்கையை நிறைவேற்றுமா அமெரிக்கா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க.....
- அமெரிக்க அதிபரின் வருகையால் கோபம் அடைந்துள்ள ரஷ்யா போரை தீவிரப் படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- ஜோ பைடனினின் திடீர் விஜயம், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர போகிறதா? உக்கிரப்படுத்த போகிறதா ?அல்லது மூன்றாவது உலக போருக்கு வழி வகுக்க போகிறதா என்பதை பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.