சட்டப்பேரவையில் வெளியான இரண்டு அறிக்கைகள்.. ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா தனித்தனியாக ஆலோசனை

Update: 2022-10-19 03:47 GMT

ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கைகள் வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என்று மூன்று தரப்பினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு தொடர்பாகவும் இரண்டு அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. ஜெயலலிதா மரணம் குறித்தும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் திட்டமிட்டுதான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது உள்ளிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு சம்பவங்களுமே அதிமுக ஆட்சி காலத்தில் நடந்தவை என்பதால், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இதே போன்று தியாகராய நகரில், சசிகலா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அவருடன் டிடிவி தினகரன் சந்தித்து பேசியதும் பரபரப்பை எகிற வைத்துள்ளது. அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் , விசாரணை வளையத்தில் சிக்கப்போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்