வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மோசடி செய்த இருவர் கைது

Update: 2023-07-06 08:40 GMT

சென்னையை அடுத்த முடிச்சூர் சாலையிலுள்ள வீட்டு உபயோக பொருட்கள் ஷோருமிற்கு வந்த நபர், 12 லட்சம் மதிப்பிலான பொருட்களை வாங்கிவிட்டு, காசோலை வழங்கியுள்ளார். அந்த காசோலையை மாற்ற முயலும்போது, பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. இதனையடுத்து ஷோரும் ஊழியர் பொருட்களை டெலிவரி செய்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது குறிப்பிட்ட வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த நபர்கள், பொருட்களை வாங்கி விட்டு வீட்டை காலி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட வெங்கடபதி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் வாங்கிய பொருட்களை இருவரும், குறைந்த விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், சுமார் 2 லட்ச ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்