கல்லாகி போன பெத்த மனம்... 5 மாத பெண் குழந்தையை விற்க முயற்சி - தூத்துக்குடியில் அதிர்ச்சி

Update: 2022-12-21 15:07 GMT

தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக 5 மாத பெண் குழந்தையை விற்க முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக 5 மாத குழந்தையுடன் நின்று கொண்டிருந்த நால்வரிடம் நடத்திய விசாரணையில், சட்ட விரோதமாக 5 மாத குழந்தையை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் தாயான கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரி மற்றும் இவரது தாயார் அய்யம்மாள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட பெண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்