உலகில் 2000-த்திற்கு பின் உயிர்களை காவு வாங்கிய கொடூர நிலநடுக்கங்கள் -துருக்கியில் கோர தாண்டவம் ஆடும் நிலநடுக்கம்

Update: 2023-02-08 06:42 GMT

2001 ஜனவரியில் குஜராத்தில் 7.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

2002 மார்ச் மாதம் வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரம் பேர் பலியாகினர்.

அல்ஜீரியாவில் 2003 மார்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்தனர்.

ஈரானில் 2003-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் 50 ஆயிரம் பேரது உயிரை குடித்தது.

2004 டிசம்பரில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது இந்தோனேசியாவில் ஏற்பட்ட 9.1 அளவுக்கொண்ட நிலநடுக்கம், அதை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர்.

2008 மார்ச்சில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 8.6 அளவுக்கொண்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்து 300 பேர் உயிரிழந்தனர்.

2005ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 80 ஆயிரம் பேர் பலியாகினர்.

2006 ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5 ஆயிரத்து 700 பேரது உயிரை காவு வாங்கியது.

2007-ல் பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 500 பேர் உயிரிழந்தனர்.

2008 சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 87 ஆயிரத்து 500 பேரை பலிகொண்டது.

2009-ல் இத்தாலி நிலநடுக்கத்திற்கு 300 பேர் உயிரிழந்தனர்.

2009 ஆம் ஆண்டும் மிகப்பெரிய நிலநடுக்கத்தை கண்ட இந்தோனேசியாவில் ஆயிரத்து 100 பேர் பலியாகினர்.

2010-ல் ஹைதி நிலநடுக்கம் 3 லட்சத்து 16 ஆயிரம் பேரது உயிரை பலிகொண்டது.

அதே ஆண்டு சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 524 பேர் உயிரிழந்தனர்.

2011-ல் ஜப்பான் எதிர்க்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

2013 பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 800 பேரை பலிகொண்டது

2014-ல் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 700 பேர் உயிரிழந்தனர்.

2015 நேபாள நிலநடுக்கத்திற்கு 8 ஆயிரத்து 800 பேர் பலியாகினர்.

2018-ல் இந்தோனேசியா பேரழிவு நிலநடுக்கத்திற்கு 4 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்தனர்.

2021 ஹைதி நிலநடுக்கம் 2,200 பேரது உயிரை குடித்தது

2022 ஆப்கானில் 6.1 அளவுகொண்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்