கெத்து காட்டும் டிரம்ப்...அப்செட் ஆன பைடன் - அமெரிக்கா அரசியலில் பரபரப்பு
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள செனட் சபை மற்றும் பிரதிநிதிகளின் சபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. சென்ட சபையில் 35 இடங்களுக்கும், பிரதிநிதிகளின் சபையில் 435 இடங்களில் நடந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அறிவிக்கப்பட்ட 390 பிரதிநிதிகளின் சபை இடங்களில் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி 207 இடங்களிலும், அதிபர் பைடனின் ஜனநாயக கட்சி 183 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுபோல, செனட் சபையில் 32 இடங்களில் முடிவுகள் வந்துள்ள நிலையில், அநேக இடங்களில் டிரம்ப்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.