Lithuania நாட்டுக்கு கொண்டாட்ட பயணம்... பொழுது போக்கில் சிகரம் தொடும் லிதுவேனியா...
தொழில் வளம், விவசாம், டூரிஸ்ட் பிளேஸ்னு எதுக்கும் குறை வைக்காம... சுற்றுலாவாசிகளுக்கு கொண்டாட்ட தீனி போடுற ஒரு ஜாலியான நாடு தான் lithuania...
இந்த நாட்டுக்கு Baltic state-னு இன்னொரு பேரும் இருக்காம்... அதுக்கு காரணம்... பால்டிக் அப்டிங்குற கடல் இந்த நாட்ட சுத்தி இருக்கறதால இப்படி ஒரு பேர் வச்சதா சொல்றாங்க... வளர்ந்துவரும் நாடுகள்ள ஒன்னான lithuaniaவுல 40 % நிலப்பரப்பை காடுகளே ஆக்கிரமிச்சுருக்காம்... அதுனால பசுமைக்கு பஞ்சமில்லாத இந்த நாட்டுல என்டர்டெயின் பண்ண எதுவும் இருக்காதோன்னு தப்பு கணக்கு போட்டு ஃபீல் பண்ணிடாதீங்க... ஊர சுத்தி பாக்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கு... சரி... ஊர் பெருமை பேசி டைம் வேஸ்டு பண்ணாம சட்டுபுட்டுனு வந்த வேலைய ஆரமிக்கலாம் வாங்க...
முதல்ல Lithuania நாட்டோட தலைநகரான vilnius உள்ள நுழைஞ்சதுமே... கதைபேசிகிட்டே Artworks on Literature street உள்ள நடந்து போயிட்டு இருந்தோம்... அப்போ வித்யாசமான டிசைன்ஸ், போட்டோஸ், ஓவியம்ன்னு இந்த தெருவே காவியமா காட்சியளிச்சுது... ஒரு வேல ரூட் மாறி எதாச்சும் மியூசியத்துக்குள்ள நுழைஞ்சுட்டோமான்னு டவுட் ஆகி... இந்த ஊர்காரங்ககிட்ட விசாரிச்சோம்... அதுக்கு அவங்க... தம்பி OR சிஸ்டர் இந்த தெருவே இப்டி தான் இருக்கும்னு சொல்லி ஆச்சர்யப்படுத்திட்டாங்க... அப்புறம் என்ன ஊர் சுத்துற மூடு போய் போட்டோ எடுக்குற மூடு வந்துருச்சு...
போதும் போதும்... போட்டோ எடுத்து phone memory-அ full பண்ணாம... அடுத்து ஒரு அமானுஷ்யமான இடத்துக்கு போகலாம் வாங்க...
Juodkrant-ங்குற கிராமத்துல இருக்க... இந்த அடர்ந்த காட்டுப்பகுதி பேரு தான் Hill of Witches... அதாவது ஒருகாலத்துல இங்க சூனியக்காரிங்க வாழ்ந்ததாகவும்... அவங்க இந்த காட்டுக்குள்ள பில்லி சூனியம் மாதிரியான பூஜைகள செஞ்சதாகவும் இந்த ஊர் மக்களோட நம்பிக்கையா இன்னமும் இருக்கு... பட் காலப்போக்குல சூனியக்காரிங்களோட இனம் அழிஞ்சாலும்... அவங்க விட்டுட்டுபோன இந்த இடம் அமானுஸ்யம் கலந்த டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிடுச்சு...
சரி... சரி... பயப்புடாதீங்க... மனசுல தைரியத்த வரவழைச்சுட்டு அடுத்து Hill of Crosses-க்கு போகலாம் வாங்க...
North lithuania-ல இருந்து ஒரு 12 கிலோ மீட்டர் டிராவல் பண்ணோம்ன்னா...
இந்த இடத்துக்கு வந்து சேர்ந்துடலாம்... இந்த இடத்துல அப்டி என்ன ஸ்பெஷலா இருக்கப்போகுதுனு உள்ள நுளைஞ்சு பாத்தப்போ... இதோ இங்கிருக்க சிலுவைகள் தான் ஒட்டு மொத்த மலையவே ஆச்சரியத்தோட திரும்பி பார்க்க வச்சிருக்கு.
14-வது நூற்றாண்டுல இந்த நாட்டுல பலர் கிருஸ்தவ மதத்துக்கு மாறிட்டு வந்தப்ப... கடவுள் மேலருக்க நம்பிக்கைய வெளிப்படுத்த நினச்ச மக்கள்...
இந்த எடத்துல சிலுவைகள நிறுவிட்டு போயிருக்காங்க... சின்னது பெருசுனு நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிட்டே போக... இப்போ கிட்டதட்ட ஒரு லட்சத்துக்கும் மேல சிலுவைகள் இங்க இருக்குறதா... நான் சொல்லல.... இதை என்னி பாத்த புள்ளிவிவரம் சொல்லுதுப்பா... சரி சரி உடனே சிலுவைகள எண்ணி பார்க்க போயிடாதீங்க... பொழுது சாயுறதுக்குள்ள அடுத்த இடத்துக்கு போகலாம் வாங்க...
மியூசித்துல பல விதம்... அதுல vilnius நகரத்துல இருக்க இந்த புதுவிதமான மியூசியம்தான் Vilnil Museum of Illusions...
பொதுவா நமக்கு தெரிஞ்ச மியூசியம்னா... mortem பண்ணி வச்ச எழும்பு கூடு... தூசி படிஞ்ச பழைய சாமான் இதெல்லாம் தான்... ஆனா இங்க இருக்குறதுலாம்... 3d drawing, 3d art-ஆல உருவாக்கப்பட்ட மாயாஜால மியூசியம்மா இருக்கு... மேஜிக் chair, Illusion photo frame-னு எல்லாத்தையும் பார்க்கும்போது... அட இதென்னடா பித்தலாட்டமா இருக்குனு நாமலே கன்பியூஸ் ஆகிருவோம்... அதுனால இங்கயிருக்க பொருட்களை எல்லாம் பார்த்து புரியலனாலும் புரிஞ்ச மாதிரியே பில்டப் கொடுத்துட்டு அடுத்த இடத்துக்கு போகலாம் வாங்க...
ஆந்திரா வரைக்கும் வந்துட்டோம்.. நான் போய் சிரஞ்ஜீவிய பாத்துட்டு வந்துட்றேன்னு விஜய் சொல்லுற மாதிரி... Vilnius சிட்டி வரை வந்துட்டோம் அப்டியே இங்க இருக்க railway museum த்தையும் சுத்திப்பார்த்துட்டு வரலாம் வாங்க...
lithuania நாட்டுல ஆதிகாலத்துல பயன்படுத்துன நிலக்கரி ரயிலும்... பாரம்பரிய ரயில்களையும்... இந்த இடத்துல பத்திரமா பாதுகாத்துட்டு வரதுனால... டூரிஸ்ட் பிளேஸ்ஸா மாரிடுச்சு இடம்... சரி.. சரி... கூட்டம் குவியறதுக்குள்ள... இந்த ரயில்களோட நறுக்குனு நாளு செல்ஃபி எடுத்து ஸ்டேடஸ் வச்சு சீன் போடலாம் வாங்க...
நாமலான் வீட்டை எதவச்சு டெகிரேட் பண்ணுவோம்... clock , photo frame , flower pot... இதுமாதிரியான அழகான பொருட்களை வச்சு அலங்காரம் பண்ணுவோம்... ஆனா zagare பகுதியில இருக்குறவங்க... கடாய், பேன், அண்டா, குண்டான், சட்டி, முட்டி சாமான்னு... கிச்சன்ல இருக்க சமையல் பாத்திரங்கள வச்சு தங்களோட வீட்டை டெகிரேட் பண்ணிருக்காங்க...
ஒரு வேல வீட்டு ஓனர் சமையல் பண்ரறவரா இருப்பாரோ...
கழுகு பார்வையில பார்க்கும்போது குட்டி தீவுமாதிரி காட்சியளிக்குற இதுதான் Trakai Island Castle... Galve ஏரிக்கு நடுவுல இருக்கும் இந்த குட்டி தீவுல 14ஆம் நூற்றாண்ட சேந்த பழமைவாய்ந்த கோட்டையும் பழசாகமா புதுசா இருக்கு... அந்த காலத்துல அரசர்களோட கோட்டையா பயன்படுத்தப்பட்ட இந்த இடம்... இப்போ சுற்றுல்லாவாசிகளோட டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிடுச்சு...
அடுத்த இடத்துக்கு போறதுக்கு முன்னாடி vilnius zoo parkல இருக்க அங்காளி பங்காளிங்ககிட்ட ஒரு attendanceஅ போட்டுட்டு வரலாம் வாங்க...
அடடா... முயல், குரங்கு, பாம்பு, நாய்ன்னு... இங்க இருக்க விலங்குகளை வெறும் வேடிக்கை மட்டும் பார்க்காம தொட்டுகூட விளையாடலாமாம்... அதுக்கு பாசம்பொங்கி கட்டி புடிச்சு ஒரே அமுக்கா அமுக்கிறாதீங்கா... அப்புறம் நம்ம பயலுக கண்ட இடத்துல கடிச்சு வச்சிற போறாய்ங்க...
காலு தேய நடந்து நடந்து ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே நாள்ள சுத்திப்பார்த்தாச்சு... அப்புறம் என்ன நாட்டோட மொத்த அழகையும் கழுகு பார்வையில தரிசிக்க hot air balloonல ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் வாங்க...
பலூன்ல டிராவல்ல... பரவசமடைஞ்சு அப்படியே நம்ம ஊருக்கு பறந்துபோயிறாதீங்க... இன்னும் இந்த நாட்டுல டான்ஸ், கேம்ஸ், திருவிழான்னு... என்டர்டெயின்ட் பன்றதுக்காக இன்னும் எக்கசக்கமான விஷயங்கள் நமக்காக வெயிட்டிங்ல இருக்கு...
அய்யய்யோ... புள்ளை புடிக்குற பூச்சிகாரன்... என்ன காப்பாத்துங்கன்னு... பேய் மாஸ்க் போட்றுக்கறத பார்த்து பயந்து... வந்தவழியே தெறிச்சு ஓடிறாதீங்க... ஏன்னா நாம இப்போ இருக்குறது lithuania மக்கள் கொண்டாடும் Shrove Tuesday festival... அதாவது இந்த நாட்டு மக்கள்... தங்களை அறியாமை ஏதாவது பாவம் செஞ்சுருந்தா... அதை மன்னிக்க சொல்லி கடவுள்கிட்ட பிரே பன்றதுக்காகதான் இப்படியொரு திருவிழாவை கொண்டாடுறாங்களாம்...
அதுனால மரத்தால செய்யப்பட்ட மாஸ்க்க போட்டு ஜாலியா ஃபன் பன்ற இவங்க... கடைசியா பெரிய மர உருவத்தை எரிச்சு திருவிழாவுக்கு என்டுகார்டு போடுறாங்க...
உலக அழகி போட்டில ஆரம்பிச்சு... மிஸ் தென்காசி அழகி போட்டி வரை... பல வகையான அழகி போட்டிகளை பாத்துருப்போம்... ஆனா இங்க ஆடுகளும் அழகா மேக்கப் போட்டுட்டு அழகி போட்டில கலந்துக்குது பாருங்க...
அதாவது ஆடுகளை வச்சு விவசாயம் செய்யுற lithuania மக்கள்... தங்களோட ஆடுகளை குஷிப்படுத்துறதுக்காக நடத்துறதுதான் Goat Beauty Pageant அப்டினு ஒரு திருவிழாவ செலப்ரேட் பண்றாங்க... இந்த திருவிழாவுல ஊர்ல இருக்க ஆடுகளையெல்லாம் கலர்ஃபுல்லா டெகிரேட் பண்ணி... ஓனாரும் ஆடுங்களோட சேர்ந்து ramp walk பண்ணுவாங்களாம்... இதுல எந்த ஆடு பார்க்க அழகாவும், ஸ்டைல்லா அன்ன நடை போட்டு நடக்குதோ... அந்த ஆடுக்குதான் அழகி பட்டம் கொடுப்பாங்கன்னா பாருங்களேன்... இந்தாமா.. ஏய்... ஆடுங்களா... ரொம்ப ஆடாதிங்க... அப்புறம் கிடா வெட்டி கொழம்பு வச்சு தின்னுபுடுவேன் பார்த்துக்கோ...
புதுசா கல்யாணம் ஆனவங்க ஹனிமூன் போவாங்க... ஆனா இந்த ஊருல கப்புல்ஸ்லான் காட்டுக்குள்ள பூப்பறிக்க போறாங்க...
காட்டுக்குள்ள magical fern பூக்களை பறிக்க கப்புல்ஸா போவாங்களாம்... பிறவு பூவ பறிச்சுட்டு வந்து... அதை தலையில டெகிரேட்பண்னா குழந்தை பிறக்குங்கறது இவங்களோட நம்பிக்கையா இருக்கு..
கப்புல்ஸ்தான் இதுமாதிரியான திருவிழாவுக்குலான் ஆசைப்படனும்... சிங்குளான நமக்கெதுக்கு இதெல்லாம்.. அதுனால நம்மள்ளோட ஃபேவரைட் ஸ்பாட்டன உணவு கடைகள தேடி புடிச்சு... lithuanina நகர தெருவோர உணவுகளை ருசிச்சு சாப்பிடலாம் வாங்க...
பொங்கல் வடை சாம்பார்ன்னு வயிறு நிறைய வெளுத்துகட்டாம...
வெளிநாட்டுக்கு போனாலும் strict diet ஃபாலோ பண்றவங்களுக்கு Fried bread sticks தான் பெஸ்ட் சாயிஸ்...
அவசர பசிக்கு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி காத்துகிடக்காம... அஞ்சே நிமிஷத்துல ரெடியாகுற Cepelinai சாப்ட்டு எஞ்ஜாய் பண்ணுங்க...
அம்மா சமைக்குற பீட்ரூட் பொறியலுக்கு ஒரு நாள் பாய் சொல்லிட்டு... lithuania ஸ்பெஷல் Cold Beetroot Soup-அ மறக்காம டிரை பண்ணுங்க...
டூர் முடிஞ்சு வெறுங்கையோட ஊருக்கு போகாம... நம்மவீட்டு குழந்தைகள குஷிப்படுத்த Grybukai mushroom cookies-அ மறக்காம வாங்கிட்டு போங்க... வெறுங்கையோட போய்டாதீங்க அப்புறம் நம்ம வீட்டு குட்டீஸ்லாம் உங்கள கடிச்சு வச்சுடுவாங்க....
சின்ன கால இருந்தாலும்... நல்ல காலா இருக்குடானு... விவேக் சொல்லுற மாதிரி... இந்த சின்ன நாட்டுக்குள்ள என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சமே இல்லனு தான் சொல்லனும்... அதுனால வாய்ப்பு கிடைச்சா நீங்களும் ஒரு குதூகலமா எஞ்சாய் பண்ணுங்கப்பா..