தெப்பத்தில் சாமியை ஏற்றும்போது விபரீதம்..! பக்தர்களுடன் கவிழ்ந்த தெப்பம் - பரபரப்பு காட்சிகள்...
சேலம் மாவட்டம் எடப்பாடியில், ஏரியை கடக்க சாமியை, தெப்பத்தில் ஏற்றியபோது, தண்ணீரில் கவிழ்ந்தது.
புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு மேளதாளங்களுடன் பெருமாள் சுவாமியை பக்தர்கள் தெப்பத்தில் எடுத்துச் செல்ல முயன்றனர்.
சாமியை தெப்பத்தில் ஏற்ற முயன்றபோது, அதிக பக்தர்கள் ஏறியதால் எதிர்பாராத விதமாக தெப்பம் தண்ணீரில் மூழ்கியது.
இதில் மேளம் கச்சேரி வாசித்த கலைஞர்கள் தண்ணீரில் விழுந்தனர். கரையில் இருந்து ஏற்றும் போது தெப்பம் கவிழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.