திருமணமான 4 நாட்களில் நடந்த சோகம்.. சடலங்களாக மிதந்த புதுமண தம்பதி - என்ன தான் நடந்தது?.. கதறும் இரு வீட்டார்

Update: 2023-04-15 04:43 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, குடிநீர் வடிகால் வாரிய நீர் தேக்கத்தில் புதுமண தம்பதி சடலமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

https://youtu.be/GibHfQJ9Vmgதிருச்செந்தூர் மேலாத்தூர் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பழனிக்குமாருக்கும், தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டை பகுதியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணுக்கும் இடையே, கடந்த 10-ம்தேதி திருமணம் நடைபெற்றது. கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற புதுமண தம்பதி, வீடு திரும்பாததால், உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், பழனிக்குமார் முத்துமாரி தம்பதி மேலாத்தூர் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் நிலையத்தில் உள்ள நீர் தேக்கத்தில் சடலமாக மிதப்பதாக தகவல் வந்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீர் தேக்கத்தில் புதுமண தம்பதி குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாட்களில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்