களைகட்டும் ஈரோடு இடைத்தேர்தல் - சுயேட்சை வேட்பாளர்களுக்கு சென்ற குக்கர், டார்ச்லைட் சின்னம்

Update: 2023-02-11 03:21 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவின் குக்கர் சின்னமும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச் லைட் சின்னமும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் 77 பேருக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னமும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கை சின்னமும், தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னமும், சமாஜ்வாடி வேட்பாளருக்கு சைக்கிள் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் வேட்பு மனுவை திரும்ப பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குக்கர் சின்னமும், தேர்தலில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச்லைட் சின்னமும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டது.

கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம் ராஜா என்பவருக்கு குக்கர் சின்னமும் விஸ்வபாரத் மக்கள் கட்சி வேட்பாளர் வேலுமணி என்பவருக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்