வணக்கம், இது தந்தியின் இன்று... வரவேற்பது அகிலா...
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...
மணிப்பூரில் அமைதி நிலவ எதையும் செய்யத் தயாராக இருப்பதாக ராகுல்காந்தி உருக்கம்... என முக்கிய நிகழ்வுகள் வரிசை கட்டிய நாள் இன்று...
டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைத்த ஆளுநர்
"இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்"
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்
அமைச்சரை நீக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை"
"அவசர கதியில் ஆளுநர் செயல்பட்டது தெரிகிறது"
ஆளுநர் முடிவை அரசு நிராகரிக்கிறது"
ஆளுநரின் முடிவு நிராகரிப்பு - தங்கம் தென்னரசு
"ஆளுநரின் நடவடிக்கையில் அரசியல் உள்நோக்கம்"
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது - அதிமுக
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு...