இன்றைய தலைப்பு செய்திகள் (16-07-2023)

Update: 2023-07-16 01:27 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு...தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கோரிக்கை....

இன்று வெளியாகிறது மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்...கலந்தாய்வுக்கான அட்டவணையும் வெளியிடுவதாக அறிவிப்பு... 

"எத்தனை தடைகள் வந்தாலும் மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது..." கல்வியில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவதே நோக்கம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

கலைஞர் நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன...குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் கட்டமைப்பு... 

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...மதுரை மாவட்டம், புது நத்தம் பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையும் திறப்பு...

பொது சிவில் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை....

உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு... அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க‌ கோரிக்கை...

டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி.....மத்திய அரசின் உதவியோடு மக்களுக்கான நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வலியுறுத்தல்....

டெல்லியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிக் கிடப்பதால், குடியிருப்பு பகுதிகள் மின்சார மின்றி இருளில் மூழ்கின....இரவையும் பொருட்படுத்தாது தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரம்.... 

சந்திரயான்-3 விண்கலம் முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் நிகழ்வில் வெற்றி......விண்கலம் தற்போது 41 ஆயிரத்து 762 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இஸ்ரோ தகவல்....

Tags:    

மேலும் செய்திகள்