இன்றைய தலைப்பு செய்திகள் (05-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-05 14:02 GMT

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்...

2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்...

கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20,000க்கும் மேற்பட்ட பொருட்கள்... அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம்...

தென்மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை....

தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்பு...

விவசாயிகள், மீனவர்கள், தொழில் மற்றும் வர்த்தகர்களின் கோரிக்கைள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...

தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி...

கள ஆய்வில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு...

தென் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு...

சென்னையில், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க மாநகர் போக்குவரத்து கழகம் நடவடிக்கை...

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு... போக்குவரத்து கழக பணிமனைகளில் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.....

வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்....

கிராமங்களில் 800 முகாம்களும், சென்னையில் 200 முகாம்களும் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு... 

Tags:    

மேலும் செய்திகள்