Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-04-18 01:09 GMT
  • தமிழ்நாட்டில் 14 நகரங்களில் சதமடித்து மக்களை வாட்டியெடுத்தது வெயில்... ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவு... 


  • சூடான் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரிப்பு... பல்கலைக்கழகத்தில் சிக்கியுள்ள 88 மாணவர்கள், வீடியோ வெளியிட்டு உருக்கம்...


  • தமிழ்நாட்டில் இயங்கும் 1500 அரசு பேருந்துகள், 15 ஆண்டுகள் பழமையானவை என அமைச்சர் ​சிவசங்கர் தகவல்...... பேருந்துகளை கழித்தால், அரசு போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என்பதால் மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை...


  • சென்னை தியேட்டரில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் திடீர் திருப்பம்... பாதிக்கப்பட்டவர்கள் எம்.பி.சி என்பதால், வழக்கில் இருந்து எஸ்.சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு நீக்கம்...


  • முகத்தில் இந்திய தேசியக் கொடி வரைந்திருந்த‌ பெண்ணுக்கு பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு... இது பஞ்சாப்... இந்தியா அல்ல... என ஊழியர் கூறியதால் சர்ச்சை...

  • இந்தியாவில் தனது முதல் சில்லறை விற்பனை கடையை மும்பையில் திறக்கிறது ஆப்பிள் நிறுவனம்... ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ, டிம் குக் (Tim Cook) இன்று திறந்து வைக்கிறார்... 


Tags:    

மேலும் செய்திகள்