Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-12-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-12-01 00:52 GMT

வங்கக் கடலில் டிசம்பர் 3ம்தேதி புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்........

கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு.....​

---

நாளை முதல் 4ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு...

11 முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்யலாம் என ஆரஞ்சு எச்சரிக்கை...

-----

டிசம்பர் 4ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...

ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்புமாறு அறிவுரை...

---

சென்னை மாநகராட்சி கோரிக்கையை ஏற்று, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு...

12 ஆயிரம் கன அடி திறந்தாலும் பாதிப்பு இல்லை என காஞ்சிபுரம் ஆட்சியர் விளக்கம்...

----

சென்னையில் இரவிலும் இடை விடாமல் கொட்டிய மழை...

தரமணி, வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது...

Tags:    

மேலும் செய்திகள்