போர்சுகீசியரின் ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்று - இந்தியாவுடன் இணைந்த தினம் இன்று.

Update: 2022-12-19 17:04 GMT

1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின், பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியை இந்தியாவுடன் இணைக்க போராட்டங்கள் தொடர்ந்தன. 1954ல்

பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

ஆனால் போர்ச்சுகல்லின் காலனியாக 1961 வரை கோவா தொடர்ந்தது. 16ஆம் நூற்றாண்டில், வல்லரசு நாடாக திகழ்ந்த போர்ச்ச்சுகல், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகள பல நாடுகளை கைபற்றி, காலனிகளாக மாற்றினர். இந்தியாவை கைபற்ற, ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்கள், போர்ச்சுகீயர்கள் இடையே போட்டி உருவானது.

1510ல் பீஜ்பூர் சுல்த்தானை தோற்கடித்த போர்ச்சூகியர்கள், கோவாவில் ஒரு நிரந்தர குடியிருப்பை உருவாக்கி, இந்தியாவில் காலூன்றினர். அதன் பிறகு 450 ஆண்டுகளாக கோவா போர்ச்சுகீயர்களின் ஆட்சியில் தொடர்ந்தது.

1950ல் கோவாவிற்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று போர்ச்சுகல் அரசை இந்திய அரசு வலியுறுத்தியது. போர்ச்சுகல் மறுத்துவிட்டதால், இரு நாடுகள் இடையே

ராஜாங்க உறவுகள் முறிந்தன. இதைத் தொடர்ந்து கோவா விடுதலைக்கான போராட்டம் தொடங்கியது.

கோவா அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தத்ரா நாகர்ஹவேலி பகுதிகளை இந்தியா கைபற்றியது.

1955ல் ஐந்தாயிரம் இந்தியர்கள், அமைதியான முறையில் கோவாவிற்குள் நுழைய முயன்றனர். போர்ச்சுகீசிய காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கோவாவை விடுவிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது.

1961ல் கோவாவை இந்திய ராணுவம் முற்றுகையிட்டது. இந்திய போர் கப்பல்கள் கோவாவின் துறைமுகத்தை முடக்கின. இதைத் தொடர்ந்து கோவாவில் இருந்த 700 போர்சூகீசியர்கள் தங்களின் குடும்பத்துடன் கோவாவை விட்டு ஒரு கப்பலில் வெளியேறினர்.

இந்திய ராணுவமும், விமானப்படையும் தாக்குதலை தொடங்கிய பின், இரண்டே நாட்களில் கோவாவின் போர்ச்சுகீசிய அரசு சரணடைந்தது.

இந்திய ராணுவம் கோவாவை விடுவித்து, இந்தியாவுடன் இணைத்த தினம், 1961, டிசம்பர் 19.

Tags:    

மேலும் செய்திகள்