புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம் இன்று... வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள்...

Update: 2023-04-21 11:46 GMT

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம் இன்று.

1891 ஏப்ரல் 29ல் புதுச்சேரியில் ஒரு பெரும் வணிகக் குடும்பத்தில் பிறந்த பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார்.

சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து அவரது தமிழ்ப்புலமையை விரிவுப்படுத்தினார். 1919ல் காரைக்கால் அரசு கல்லூரித் தமிழ் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

புதுவையில் தங்கியிருந்த பாரதியாரின் நெருங்கிய நண்பராகவும், தொண்டராகவும் மாறினார். அவர் மீது இருந்த பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

தந்தை பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பாரதிதாசன், கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பல போராட்டங்களில் ஈடுப்பட்டு பல முறை சிறைக்கு சென்றுள்ளார்.

1946 ஜூலையில் அறிஞர் அண்ணாவால், புரட்சிக் கவிஞர் என்று பாராட்டப்பட்டு, 25,000 ரூபாய் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1954ல் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திட்டு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதி பெரும் புகழ் பெற்றார். பல திரைபடங் களுக்கு அவர் கதை வசனமும் எழுதியுள்ளார்.

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் என்ற பாடிய பாரதிதாசன் உடல் நலக்குறைவு காரணமாக1964 ஏப்ரல் 21ல், தனது 72ஆம் வயதில் காலமானார்



Tags:    

மேலும் செய்திகள்